2026 ஏப்ரல் 20, திங்கட்கிழமை

மட்டக்களப்பில் மினி சூறாவளி: 10 வீடுகள் சேதம்

Kanagaraj   / 2012 டிசெம்பர் 16 , மு.ப. 07:34 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ரி.லோஹித்,எம்.சுக்ரி)

மட்டக்களப்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வீசிய மினி சூறாவளி காரணமாக கல்லடி நொச்சிமுனை பிரதேசத்தில் 10 வீடுகள் சேதமடைந்துள்ளன.

இன்று அதிகாலை 3 மணியளவில் மினி சூறாவளியினால் அப்பிரதேசத்திலுள்ள வீடுகளின் கூரைத் தகடுகள், சீற்கள் மற்றும் ஓடுகள் சில கழன்று பறந்துள்ளன.

அதே நேரம் அருகிலிருந்த சிறிய மரங்கள், மதில்களும் உடைந்துள்ளன. இதனால் அப் பிரதேசத்திலுள்ள சில குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
சேதமடைந்த வீடுகள் தொடர்பான தகவல்கள் சேகரிக்கப்பட்டுக் வருவதாக மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு அறிவித்துள்ளது.படங்கள்:- எம்.சுக்ரி


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .