2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை

செவிப்புலன் வலுவற்றோர் புனர்வாழ்வு நிறுவனத்தின் 13ஆவது ஆண்டு நிறைவு

Suganthini Ratnam   / 2013 ஒக்டோபர் 06 , மு.ப. 08:36 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


செவிப்புலன் வலுவற்றோர் புனர்வாழ்வு நிறுவனத்தின் 13ஆவது ஆண்டு நிறைவு விழா மட்டக்களப்பு மாநகர சபை நகர மண்டபத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

செவிப்புலன் வலுவற்றோர் புனர்வாழ்வு நிறுவனத்தின் மட்டக்களப்பு மாவட்டத் தலைவர் எஸ்.விக்கிரமன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் ஓஸன் ஸ்ரார்ஸ் நிறுவனத்தின் இலங்கைக்கான முகாமையாளர் வி.தர்மரஞ்சன்,  விழிப்புலன் வலுவற்றோர் புனர்வாழ்வு நிறுவனத்தின் ஆலோசகர் எஸ்.சனா, செவிப்புலன் வலுவற்றோர் புனர்வாழ்வு நிறுவனத்தின் யாழ்ப்பாண மாவட்ட தலைவர் எஸ்.ஜெயக்குமார், செவிப்புலன் வலுவற்றோர் புனர்வாழ்வு நிறுவனத்தின் திருகோணமலை மாவட்டத்  தலைவர் து.அன்ரன் லீனேகே, செவிப்புலன் வலுவற்றோர் புனர்வாழ்வு வவுனியா மாவட்ட தலைவர் கே.கோமவாசன், செவிப்புலன் வலுவற்றோர் புனர்வாழ்வு நிறுவனத்தின் கொழும்புத் தலைவர்  கே.முத்துக்குமாரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

கொழும்பு, மட்டக்களப்பு, யாழ்ப்பாணம், வவுனியா திருகோணமலை ஆகியவற்றைச் சேர்ந்த பெருமளவானோர் இதில் பங்குகொண்டுள்ளனர். 
இதன்போது செவிப்புலன் வலுவற்றோர் புனர்வாழ்வு நிறுவனத்தின் 13வேது ஆண்டு நிறைவையொட்டி நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றியீட்டியவர்களுக்கு பரிசில்களும் வழங்கப்பட்டன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X