2026 மே 04, திங்கட்கிழமை

காத்தான்குடியில் 18 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்

Suganthini Ratnam   / 2013 பெப்ரவரி 22 , மு.ப. 09:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.சுக்ரி

காத்தான்குடியில் டெங்கு நோயால் பாதிக்கப்பட்ட 18 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக காத்தான்குடி பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் யு.எல்.நசிர்தீன் தெரிவித்தார்.

காத்தான்குடி முதலாம் குறிச்சி, வடக்கு எல்லை, ஸாவியா வீதி, மீராபள்ளி வீதி ஆகிய பகுதிகளிலேயே இந்த டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். 

இந்தப் பகுதிகளில் டெங்கு நுளம்புகளை அழிக்கும் வேலைத்திட்டம் காத்தான்குடி பொதுச்சுகாதாரப் பரிசோதகர்களினால்; காத்தான்குடி நகர சபையின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் புகை விசிறப்படுவதுடன், விசேட டெங்கு பரிசோதனையும் மேற்கொள்ளப்படுகின்றது. மேலும், அபேட் என்னும் மீன்கள் கிணறுகளில் விடப்படுவதாகவும் காத்தான்குடி பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .