2026 மே 04, திங்கட்கிழமை

மாதுருஓயா பெருக்கெடுத்ததால் 18 ஆயிரம் ஏக்கர் வயல் நிலங்கள் பாதிப்பு

Kogilavani   / 2013 ஜனவரி 27 , மு.ப. 06:11 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஆர்.அனுருத்தன், ஸரீபா, ஏ.எச்.ஏ. ஹுஸைன்

பொலன்னறுவை மாவட்டத்தில் பெய்த கடும் மழையைத் தொடர்ந்து மாதுருஓயா பெருக்கெடுத்ததால் கல்குடாத் தொகுதியில் உள்ள பதினெட்டாயிரம் ஏக்கர் வயல் நிலங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
 
கல்குடாத் தொகுதியில் உள்ள பெருவெட்ட, ஆத்துச்சேனை, கிலச்சிமடு, கழுவாமடு, பொத்தானை, அக்குராணை, வாகனேரி, தவன, நூறு ஏக்கர் போன்ற பிரதேசங்களில் உள்ள வயல் நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

மேற்படி பிரதேச வயல் நிலங்களில்; இன்னும் ஓரிரு தினங்களில் அறுவடை மேற்கொள்ளப்படவிருந்தமை குறிப்பிடத்தக்கது.
 
மட்டக்களப்பு மாவட்டத்தில் பெய்த கடும் மழையைத் தொடர்ந்து பிறைந்துறைச்சேனை, காவத்தமுனை, மாஞ்சோலை போன்ற பகுதிகளில் உள்ள வீடுகளில் நீர் புகுந்துள்ளதால் மக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
 
இதேவேளை மட்டக்களப்பு மாவட்டத்தில் மழையுடனான காலநிலை சீரடைந்துள்ள போதிலும் வானம் மப்பும் மந்தாரமுமாக காட்சியளிக்கின்றது.

இதேவேளை, மட்டக்களப்பு மாவட்டத்தில் பெய்த கடும் மழையைத் தொடர்ந்து பிறைந்துரைச்சேனை, காவத்தமுனை, மாஞ்சோலை, போன்ற பகுதிகளில் உள்ள வீடுகளில் நீர் புகுந்துள்ளதால் மக்கள் பல்வேறு சிரமங்களை எதிர் நோக்கி வருகின்றனர்.








  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .