2026 மே 04, திங்கட்கிழமை

கோறளைப்பற்றிலும் ஓட்டமாவடியிலும் 6 பேருக்கு டெங்கு

Suganthini Ratnam   / 2013 பெப்ரவரி 27 , மு.ப. 07:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஸரீபா

கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவு மற்றும் ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவுகளில் ஆறு பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக  கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் மற்றும் ஓட்டமாவடி  சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகங்கள் மூலம் அறியமுடிகின்றது.

வாழைச்சேனை – 04 ஹைராத் வீதியில் நான்கு பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதுடன், ஓட்டமாவடி ஜூம்ஆ பள்ளிவாசல் வீதியில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.

டெங்கு நோய் பரவும் அபாயத்தைத் தொடர்ந்து இரண்டு பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் அடையாளம் காணப்பட்ட இடங்களுக்கு மாத்திரம் பிரதேச சபைகளின் ஒத்துழைப்புடன் புகை விசிறப்படுகின்றன. மேலும் பிரதேசத்தில் உள்ள பொது இடங்களை துப்பரவு செய்யும் வேலைத்திட்டத்தில் அல் ஹக் விளையாட்டுக் கழகத்தால் வாழைச்சேனை மஸ்ஜிதுல் ஹைராத் பள்ளிவாயல் மையவாடி நேற்று செவ்வாய்க்கிழமை சிரமதான அடிப்படையில் துப்பரவு செய்யப்பட்டது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .