Super User / 2011 ஏப்ரல் 02 , மு.ப. 10:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(ஸரீபா)
நடைபெற்று முடிந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் கோறளைப்பற்று மேற்கு (ஓட்டமாவடி) பிரதேச சபைக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஏழு (07) உறுப்பினர்களும் நேற்று வெள்ளிக்கிழமை சத்திய பிரமானம் செய்துகொண்டனர்.
பிரதேச சபை செயலாளர் ரீ.தர்மலிங்கம் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கைத்தொழில் அபிவிருத்தி அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவருமான றிசாட் பதியூதீன், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தவிசாளரும் கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி, வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ் பாரூக் மற்றும் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எம்.எஸ்.சுபைர் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
அதிதிகள் பிரதேச சபையடியில் இருந்து ஊர்வலமாக மேடைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
கோறளைப்பற்று மேற்கு (ஓட்டமாவடி) பிரதேச சபைக்கு ஒன்பது உறுப்பினர்களில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் போட்டியிட்டவர்களில் ஏழு (07) உறுப்பினர்களும் ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக தலா ஒரு உறுப்பினரும் தெரிவு செய்யப்பட்டனர்.
.jpg)
.jpg)
3 hours ago
3 hours ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
4 hours ago
4 hours ago