Menaka Mookandi / 2011 ஏப்ரல் 12 , மு.ப. 10:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எம்.சுக்ரி)
ஏறாவூர் நகர சபை தேர்தலில் போட்டியிட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைமை வேட்பாளரின் வீட்டின் மீது இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை இடம்பெற்ற கல்வீச்சு சம்பவத்தில் வீட்டின் கண்ணாடிகள் உட்பட வீட்டிற்கும் சேதமேற்பட்டடுள்ளன.
ஏறாவூர் நகர சபை தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைமை வேட்பாளராக போட்டியிட்ட ஓடாவியார் வீதியிலுள்ள எம்.ஏ.சி.எம் பறக்கத் என்பவரின் வீட்டின் மீதே இனம் தெரியாத சிலர் இன்று அதிகாலை கற்களை வீசியுள்ளனர்.
இதனால் வீட்டின் கண்ணாடிகள் உடைந்து சேதமடைந்துள்ளதுடன் வீட்டுக்கும் சிறிய சேதம் எற்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதை அடுத்து பொலிஸார் இச்சம்பவம் தொர்பில் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.
46 minute ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
46 minute ago
4 hours ago
5 hours ago