Menaka Mookandi / 2011 ஏப்ரல் 18 , மு.ப. 07:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
(அப்துல்சலாம் யாசிம்)
மாற்றுக்கட்சிகளில் அங்கம் வகிக்கும் தமிழ் மக்களின் பிரதிநிதிகள் அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுவதன் மூலமே அபிவிருத்திகளை இலகுவாக பெற்றுக்கொள்ள முடியுமென கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எம்.எஸ்.சுபைர் தெரிவித்தார்.
மட்டக்களப்பு, பட்டிப்பனை பிரதேச செயலகப்பிரிவில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட விதவைகள் மற்றும் விசேட தேவையுடையோருக்கு நிவாரண கொடுப்பனவு வழங்கும் நிகழ்வில் உறையாற்றும்போதே அமைச்சர் சுபைர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
பிரதேச செயலாளர் திருமதி வாசுகி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் ரூபாய் 5,000 படி 25பேருக்கு வழங்கி வைக்கப்பட்டது. இதனையடுத்து மக்கள் மத்தியில் உரையாடியி மாகாண அமைச்சர், 'வறுமைப்பட்ட மக்களின் வாழ்க்கைத் தரத்தை முன்னேற்றுவதில் ஐனாதிபதி பல்வேறு திட்டங்களை முன்னெடுத்து வருகின்றார்.
ஐனாதிபதியின் அவ்வாறான திட்டங்களுக்கு கிழக்கு மாகாண சபையும் தனது பூரண ஆதரவை நல்கிவருகின்றது. விதவைகள், விசேட தேவையுடையோர் விடயத்தில் எனது அமைச்சு கூடிய கரிசனை காட்டி வருகின்றது.
கிழக்கு மாகாணத்தில் சுமார் 50000 விதவைகள் உள்ளனர். இவர்கள் விடயத்தில் எவ்வாறான திட்டங்களை முன்னெடுக்க முடியுமென்று அமைச்சு உயர்அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.
குடும்பத்தாதி எனும் வருமானம் பெறக்கூடிய ஒரு திட்டத்தை நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ளேன். இதற்கு விதவைகளையே தெரிவு செய்ய எண்ணியுள்ளேன். அத்துடன் விசேட அம்புலன்ஸ் சேவையொன்றை அறிமுகப்படுத்தியுள்ளேன். எனவே கிழக்கு மாகாண சபையூடாகவும், மத்திய அரசின் ஊடாகவும் இன, மத, கட்சி பேதமற்ற சேவை இடம்பெற்றவண்ணமே உள்ளன.
இவ்வாறான நிலையில் மாற்றுக்கட்சிகளிலுள்ள தமிழ் பிரதிநிதிகள் சமூகநலன் கருதி அரசுடன் இணைந்து செயற்பட முன்வர வேண்டும். கிழக்கு மக்களின் விமோசனத்துக்கும் இது பாரிய பங்களிப்பை செய்யும்' என்றார்.
46 minute ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
46 minute ago
4 hours ago
5 hours ago