Suganthini Ratnam / 2011 ஏப்ரல் 20 , மு.ப. 10:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(ரி.லோஹித்)
எக்காரணத்தைக் கொண்டும் கிழக்குப் பல்கலைக்கழகத்திலுள்ள பொலிஸ் காவலரண் அகற்றப்பட மாட்டாதென உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
கிழக்குப் பல்கலைக்கழகத்திலுள்ள காவலரணை அகற்றுமாறு மாணவர்கள் கோரி வருகின்றனர். இது சம்பந்தமான கூட்டமொன்று கிழக்குப் பல்கலைக்கழகத்தில் இன்று புதன்கிழமை காலை நடைபெற்றபோதே அவர் இதனைக் கூறினார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
இலங்கையிலுள்ள அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் பொலிஸ் காலலரண்கள் உள்ளன. பாதுகாப்பு அரண்கள் வெளிநாடுகளில் கூட உள்ளன. மாணவர்களுக்கு உதவி செய்வதற்காகவே பொலிஸ் காவலரண்கள் உள்ளன. அதனை அகற்றுவதற்கு ஒருபோதும் அனுமதிக்க முடியாது. இல்லையானால் இராணுவத்தினர், விமானப்படையினர், கடற்படையினர் அல்லது விசேட அதிரடிப்படையினர் இவர்களில் யாராவது பணிக்கமர்த்தப்படுவர்.
வடக்கு, கிழக்குப் பிரதேசத்திலுள்ள பல்கலைக்கழகங்களுக்கு வரும் சிங்கள மாணவர்களைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு தமிழ் மாணவர்களுக்கும் ஏனைய பல்கலைக்கழகங்களுக்கு செல்லும் தமிழ் மாணவர்களைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு சிங்கள மாணவர்களுக்கும் உள்ளது. இதனைக் கடைப்பிடித்தால் எந்தப்பிரச்சினையும் ஏற்படாது. 30 வருடங்களாக நடைபெற்ற, இருந்து வந்த முரண்பாடு காரணமாக இரு தரப்பினர்களுக்கிடையேயுள்ள கசப்புணர்வுகளை மறந்துவிட்டு விட்டுக்கொடுப்புடன் நடந்துகொள்ள வேண்டும் என்றார்.
இந்த உயர் மட்டக்கூட்டத்தில் மீள்குடியேற்ற பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.யோகேஸ்வரன், பல்கலைக்கழக பதில் உபவேந்தர் கலாநிதி பிரேம்குமார், பதிவாளர் தயாபரன் மற்றும் பொலிஸ் உயர் அதிகாரிகள், மாணவ ஒன்றியத்தினர் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
.jpg)
.jpg)
7 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
8 hours ago