Suganthini Ratnam / 2011 ஏப்ரல் 27 , மு.ப. 10:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
(அப்துல்சலாம் யாசிம்)
நாட்டில் பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்டதேயொழிய தமிழ் மக்களின் உரிமைகள் தோற்கடிக்கப்படவில்லையென கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எம்.எஸ்.சுபைர் தெரிவித்தார்.
கிரான் பிரதேச செயலகத்திற்குட்பட்ட வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட விதவைகளுக்கு 5,000 ரூபாய் கொடுப்பனவு வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இதில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,
கிழக்கு மாகாணம் விடுவிக்கப்பட்ட பின்னர் பாரிய அபிவிருத்தியை கண்டு வருகின்றது. மாகாணத்தை அபிவிருத்தி செய்வதிலும் இப்பகுதி மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதிலும் ஐனாதிபதி அதிக அக்கறை செலுத்தி வருகின்றார்.
யுத்தகாலத்தில் இப்பகுதி மிகவும் பின்தங்கிய நிலையிலிருந்தது. 30 வருடகால யுத்தத்திலிருந்து இப்பகுதியை மீட்டெடுத்து அபிவிருத்தி பணிகளை முன்னெடுத்துச் செல்லும் ஐனாதிபதிக்கு நாம் நன்றி தெரிவிக்க கடமைப்பட்டுள்ளோம்.
தமிழ் சமூகம், அரசாங்கத்தின் எதிர்ச்சமூகம் என்ற நிலைமை இன்று இல்லை. தமிழ் மக்களின் உரிமைகள் ஒருபோதும் மழுங்கடிக்கப்படமாட்டாது. அவர்களது அபிலாஷைகள் குழிதோண்டி புதைக்கப்படமாட்டாது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தமிழ் மக்களுக்கான அபிவிருத்திப் பணிகளை முன்னெடுப்பதில் அதிக அக்கறை காட்டுமாறு எமக்கு பணித்துள்ளார் என்றார்.
3 hours ago
5 hours ago
5 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
5 hours ago
5 hours ago
7 hours ago