Suganthini Ratnam / 2011 ஏப்ரல் 29 , மு.ப. 08:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஜவீந்திரா)
மட்டக்களப்பு மாவட்டத்தில் மனிதாபிமானப் பணிகளை மேற்கொண்டு வரும் நாம், அபிவிருத்திப் பணிகளையும் செவ்வனே நிறைவேற்றிவருகின்றோம் என இலங்கைச் செஞ்சிலுவைச் மட்டக்களப்பு மாவட்ட கிளைத் தலைவர் த.வசந்தராசா தெரிவித்துள்ளார்.
இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்டக் கிளையினால் 3.8 மில்லியன் ரூபாய் பெறுமதியான இருசக்கர உழவு இயந்திரங்கள் பத்து விவசாய அமைப்புக்களுக்கு இன்று வெள்ளிக்கிழமை கையளிக்கப்பட்டன. இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,
முதற்கட்டமாக எமது சங்கத்தினால் பத்து விவசாய அமைப்புக்களுக்கு உழவு இயந்திரங்கள் வழங்கப்படுகின்றன. மேலும் பல விவசாய அமைப்புக்களுக்கு உழவு இயந்திரங்கள் வழங்குவதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளோம். பட்டிப்பளை, வவுணதீவு, வெல்லாவெளி ஆகிய பிரதேசங்களிலுள்ள பத்து விவசாய சங்கங்கள் இதன் மூலம் நன்மையடையவுள்ளனர் என்றார்.
36 minute ago
1 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
36 minute ago
1 hours ago
4 hours ago