Suganthini Ratnam / 2012 பெப்ரவரி 09 , மு.ப. 06:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எம்.சுக்ரி)
சமுர்த்திப் பயனாளிகளுக்கு சமூக காப்புரித்துக்காக வழங்கப்படுகின்ற வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெறுவதற்கான கொடுப்பனவுத் தொகை நாள் ஒன்றுக்கு 200 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக சுற்றறிக்கை மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி உதவி ஆணையாளர் பி.குணரட்னம் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள சகல பிரதேச செயலகங்களுக்கும் நேற்று புதன்கிழமை இதற்கான சுற்றறிக்கையை அனுப்பிவைத்துள்ளார்.
இந்த சமூக காப்புரித்து கொடுப்பனவில் சமுர்த்திப் பயனாளி ஒருவர் அரசாங்க வைத்தியசாலையில் தங்கியிருந்து 7 நாட்களுக்கு சிகிச்சை பெற்றிருந்தால் அவருக்கு நாள் ஒன்றுக்கு 100 ரூபா வழங்கப்பட்டு வந்தது. தற்போது இக்கொடுப்பனவுத் தொகை நாள் ஒன்றுக்கு 200 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
சமுர்த்திப் பயனாளிகளுக்கு சமுர்த்தி சமூக காப்புரித்து மரணக் கொடுப்பனவு 5,000 ரூபாவும் திருமணக் கொடுப்பனவு 3,000 ரூபாவும் பிரசவக் கொடுப்பனவு 5,000 ரூபாவும் வழங்கப்படுகின்றன.
13 minute ago
26 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
26 minute ago
2 hours ago