Suganthini Ratnam / 2012 பெப்ரவரி 14 , மு.ப. 04:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கே.எஸ்.வதனகுமார்,ஜிப்ரான்,எம்.சுக்ரி)
மட்டக்களப்பு மங்களராம ரஜமஹா விஹாரையின் விகாராதிபதி அம்பிற்றிய சுமண ரத்தினதேரர் அவ்விகாரைக்கு முன்பாக இன்று செவ்வாய்க்கிழமை காலை 6 மணி முதல் உண்ணாவிரதமொன்றில் ஈடுபட்டுள்ளார்.
சிங்கள, முஸ்லிம், தமிழ் மக்களின் காணிப் பிரச்சினைகளை தீர்;த்துவைக்குமாறு கோரியும் கிழக்கு மாகாணத்தில் சிங்கள, தமிழ், முஸ்லிம் ஏழை மக்களுக்கு பொறுப்புடன் செயற்பட வேண்டிய அரசாங்க அதிகாரிகளினால் மேற்கொள்ளப்படுகின்ற பழிவாங்கல் நடவடிக்கைகளை முடிவுக்கு கொண்டுவருவதற்கு ஜனாதிபதியின் தலையீட்டை வலியுறுத்தியும் தேரர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளார்.
கிழக்கு மாகாணத்தில் நிலவும் மூவின மக்களின் காணிப் பிரச்சினைகளை தீர்த்துவைக்குமாறும் இதற்காக ஜனாதிபதி பொறுப்பு வாய்ந்த அமைச்சர் ஒருவரை அனுப்பிவைத்து காணிப் பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் உத்தரவாதமளிக்க வேண்டும் எனவும் தேரர் தெரிவித்துள்ளார்.
இவ் உண்ணாவிரதத்திற்கு ஆதரவு தெரிவித்து அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த ஒருசில சிங்கள மற்றும் முஸ்லிம் மக்கள் பதாகைகளைத் தாங்கியவாறு உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
உண்ணாவிரதம் நடைபெறுகின்ற இடத்திற்குச் சென்ற மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பொறுப்பதிகாரி கே.திஸாநாயக்கவிடம் ஜனாதிபதிக்கு அனுப்புவதற்கான மஜர் ஒன்றையும் தேரர் கையளித்தார்.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
13 minute ago
26 minute ago
2 hours ago
ummpa Tuesday, 14 February 2012 07:40 PM
என்ன உண்மையான கோரிக்கை இதுதானா ! அல்லது இதனைக்கொண்டு இன்னொரு விடயத்தை முடிப்பதக்கானதா?
Reply : 0 0
Jasintha Tuesday, 14 February 2012 08:32 PM
வாருங்கள்..................... எல்லா மத தலைவரும் ஒன்றிணைந்து கைகோர்தது நம் உரிமைகளுக்காக போராடுவோம்........... நாம் அணைவரும் ஒரே நாட்டு மக்கள் அல்லவா.......
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
26 minute ago
2 hours ago