Suganthini Ratnam / 2012 மார்ச் 21 , மு.ப. 05:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(எம்.சுக்ரி, ரி.லோஹித், ஜிப்ரான், ஆர்.அனுருத்தன், ஸரிபா)
உயிர்நீத்த பொலிஸாரை நினைவுகூரும் முகமாக வருடாந்தம் அனுஷ்டிக்கப்பட்டுவரும் பொலிஸ் ஞாபகார்த்ததினம் மட்டக்களப்பு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்தின் முன்பாகவுள்ள நினைவுத்தூபிக்கு அருகில் இன்று புதன்கிழமை காலை நடைபெற்றது.
உயிர்நீத்த பொலஸாருக்காக இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டதுடன், நினைவுத்தூபிக்கு மலர்வளையமும் வைக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டன.
மட்டக்களப்பு உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் வி.டபிள்யூ.ஆர்.செனவிரத்ன தலைமையில் நடைபெற்ற 148ஆவது பொலிஸ் ஞாபகார்த்த வைபவத்தில் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள சகல பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள், உயிரிழந்த பொலிஸாரின் உறவினர்கள் கலந்து கொண்டனர்.
148ஆவது பொலிஸ் நினைவுதினமான இன்றுவரையில் சுமார் 3075 பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடமையின்போது வீரமரணம் அடைந்துள்ளனர்.
இதேவேளை, உயிர்நீத்த பொலிஸ் உத்தியோகஸ்த்தர்களின் நினைவுதினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு பேத்தாழை ஸ்ரீமுருகன் ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடுகள் நடைபெற்றன.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
7 minute ago
17 minute ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
17 minute ago
4 hours ago