2026 மே 04, திங்கட்கிழமை

மருத்துவக் கண்காட்சியை கிழக்கு மாகாண முதல்வர் பார்வை

Suganthini Ratnam   / 2012 ஏப்ரல் 02 , மு.ப. 03:36 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஜிப்ரான்,எம்.சுக்ரி)

கிழக்கு மாகாணத்தில் முதன்முறையாக நடைபெற்ற  மருத்துவக் கண்காட்சியை கிழக்கு மாகாண முதலமைச்சரும்  தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசத்துரை சந்திரகாந்தன் நேற்றுமுன்தினம் சனிக்கிழமை பார்வையிட்டார்.

இவருடன் கிழக்கு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் கிட்ணண் கோவிந்தராஜா மற்றும் கிக்கு மாகாணசபை உறுப்பினர் பூ.பிரசாந்தன் ஆகியோரும் கண்காட்சியைப் பார்வையிட்டனர்.

14 பிரிவுகளைக் கொண்டதாக அமைக்கப்பட்டுள்ள காட்சிக்கூடத்தில் மனித உடலில் ஏற்படக்கூடிய நோய்கள் அதற்கான அறிகுறிகள், தடுக்கும் முறைகள்,  அதற்கான நிவாரணிகள் என்பன தொடர்பான விளக்கங்கள் வழங்கப்பட்டதுடன்,  அது
தொடர்பான விளக்கப்படங்களும் காட்சிப்படுத்தப்பட்டன.

இது போன்ற கண்காட்சிகளின் ஊடாக  ஓரளவேனும் நோய்த்தடுப்புக்களை ஏற்படுத்தலாமென்பதுடன்,  நோய்கள் தொடர்பில் விழிப்புணர்வுடன்  மக்கள் அவதானமாக இருக்கமுடியுமெனவும் இக்கண்காட்சியைப் பார்வையிட்ட கிழக்கு மாகாண
முதலமைச்சர் கருத்து தெரிவித்தார்.

இதேவேளை, நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலையுடன் நிறைவுற்ற இக்கண்காட்சியை 25000  பேர் பார்வையிட்டதாக கிழக்கு பல்கலைக்கழகத்தின் சௌக்கிய பராமரிப்பு விஞ்ஞான பீடத்தின் பீடாதிபதி டாக்டர் கே.கருனாகரன் தெரிவித்தார்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .