2026 மே 04, திங்கட்கிழமை

ஆசியா மன்றத்தின் நிதியில் எஸ்கோ நிறுவனத்தினால் பொலிஸாருக்கான துவிச்சக்கர வண்டிகள் வழங்கல்

Super User   / 2012 ஏப்ரல் 05 , மு.ப. 08:58 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ரி.லோஹித்)

 
பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கும் சமூகத்துக்கும் இடையிலான நல்லுறவை ஏற்படுத்தும் திட்டத்தின் கீழ் ஆசியா மன்றத்தின் நிதியுதவியில் எஸ்கோ என்று அழைக்கப்படும் கிழக்கிலங்கை தன்னம்பிக்கை சமூக எழிச்சி நிறுவனத்தினால் இன்று வியாழக்கிழமை துவிச்சக்கர வண்டிகள் கையளிக்கப்பட்டன.

குறித்த துவிச்சக்கர வண்டிகள் கிழக்கு மாகாண சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ஜகத் அபேசிறி குணவர்த்தனவிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டன.

மட்டக்களப்பு லேடி மனிங் றைவிலுள்ள கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அலுவலகத்தில் வைத்து கையளிக்கப்பட்ட இந்நிகழ்வில் எஸ்கோவின் பணிப்பாளர் சின்னத்தம்பி ஸ்பிரியோன், உதவி பணிப்பாளர் செல்வி கோதை பொன்னுத்துரை, ஆசியா மன்றத்தின் நிகழ்ச்சி உத்தியோகத்தர்களான தீபலால், சசிகரன், கலனி சுபசிங்க ஆகியோர் கலந்துகொண்டனர்.

சுமார் 3லட்சத்து 20 ஆயிரம் ரூபா பெறுமதியான இந்த துவிச்சக்கர வண்டிகள் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள 12 பொலிஸ் நிலையங்களுக்கு பகிர்ந்தளிக்கப்படவுள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .