2026 மே 04, திங்கட்கிழமை

சுகாதார சீர்கேட்டினால் மாணவர் விடுதி மூடல்

Super User   / 2012 ஏப்ரல் 18 , பி.ப. 04:15 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஜிப்ரான்)


காத்தான்குடி அல் - மனார் அறிவியல் கல்லூரியின் மாணவர் விடுதிக்கு அருகிலுள்ள தனியார் காணியொன்றில் கொட்டப்பட்ட  குப்பைகளினால் ஏற்பட்ட சுகாதார சீர்கேட்டைத் தொடர்ந்து குறித்த விடுதி மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளது.

குறித்த இடத்திற்கு வந்த பொதுச் சுகாதார பரிசோதகர் எம்.றகுமத்துல்லாஹ் தலைமையிலான குழுவினர் மாணவர்களின் நலன் கருதி உடனடியாக இவ்விடுதியை மூடுமாறு நிருவாகனத்தினரிடம் விடுத்த கோரிக்கைக்கமைய இவ்விடுதி மூடப்பட்டுள்ளது.

முதலாம் தவணைக்காக மூடப்பட்டிருந்த மாணவர் விடுதி கடந்த சனிக்கிழமை மீண்டும் திறக்கப்பட்டது.  இவ்விடுமுறை காலப்பகுதிக்குள் இவ்விடுதிக்கு அருகிலுள்ள தனியார் காணியில் குப்பைகள் கொட்டப்பட்டுள்ளதாகவும் இக்குப்பைகளிலிருந்து அதிகளவான இலையான்கள் வருவதாகவும் மாணவர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையிலேயே இன்று மீண்டும் மாணவர் விடுதி மூடப்பட்டு மாணவர்கள் வீடுகளுக்கு அனுப்பப்பட்டனர். இது தொடர்பாக பொதுச் சுகாதார பரிசோதகர் எம்.றகுமத்துல்லாவிடம் கேட்டபோது,

"குப்பைகள் கொட்டப்பட்டுள்ள இடத்தில் மண் கொட்டி சரியான பராமரிப்பு செய்யப்படாததால் அங்கிருந்து இலையான்கள் உற்பத்தியாகியுள்ளதாகவும் இவ்இலையான்களின் தொல்லையால் மாணவர்களின் சுகாதாரத்திற்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது.  இதன் காரணமாகவே மாணவர் விடுதியை மூடுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

இப்பகுதி சுத்தம் செய்யப்பட்ட பின்னர்  பொதுச் சுகாதார பரிசோதகர்களால் பரிசீலிக்கப்பட்ட பின்னரே விடுதியை திறக்குமாறு உத்தரவிட்டுள்ளது" என்றார்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .