2026 மே 04, திங்கட்கிழமை

மட்டு. மாவட்டத்தில் சிறுவர் தொழிலாளர்களை கண்டுபிடிக்க அரசாங்கம் நடவடிக்கை

Menaka Mookandi   / 2012 ஏப்ரல் 19 , மு.ப. 07:39 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஜிப்ரான்)


மட்டக்களப்பு மாவட்டத்தில் சட்டவிரோதமான முறையில் வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ள சிறுவர் தொழிலாளர்களை கண்டுபிடித்து மீண்டும் பாடசாலைகளில் இணைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
 
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் மட்டக்களப்பு மாவட்ட அலுவலகம், கல்வித் திணைக்களம், பொலிஸ் திணைக்களம், தொழில் திணைக்களம், ஐக்கிய நாடுகள் சபையின் உலக தொழிலாளர் நிறுவனம், யுனிசெப் நிறுவனம், சிறுவர் நன்னடத்தைப் பிரிவு என்பவற்றுடன் இணைந்து மேற்படி நடவடிக்கையினை அரசாங்கம் மேற்கொண்டுள்ளது.

இது தொடர்பாக மாவட்டத்திலுள்ள உயர் அதிகாரிகளுக்கு விளக்கமூட்டி குறித்த சட்டவிரோத நடவக்கையினைத் தடுத்தல் தொடர்பான செயற்பாட்டு குழுக்களை நியமிக்கும் விஷேட மாநாடு இன்று காலை மட்டக்களப்பு மாவட்ட இலங்கை மனித
உரிமைகள் ஆணைக்குழவின் தலைமையகத்தில் நடைபெற்றது.

மாவட்ட மனித உரிமைகள் ஆணைக்குழு இணைப்பாளர் கே.மனோகரன் தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டில் மனித உரிமை ஆணைக்குழவின் விசாரணை அதிகாரி ஏ.சீ.அப்துல் அஸீஸ் விளக்கவுரை நிகழ்த்தினார்.

உலக தொழலாளர் அமைப்பின் மாவட்ட பணிப்பாளர் ஆர்.சிவப்பிரகாசம் மாவட்ட தொழில் திணைக்கள பிரதி ஆணையாளர் திருமதி ஆர்.திருச்செல்வம் வலய கல்வி பணிப்பாளர்கள் மாவட்ட பொலிஸ் திணைக்கள சிறுவர் பொறுப்பதிகாரி திருமதி
கே.யோகராஜன் யுனிசெப் அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .