2026 மே 04, திங்கட்கிழமை

மீனவ சங்கங்களுக்கு நவீன மீன்பிடி உபகரணங்கள் வழங்கிவைப்பு

Suganthini Ratnam   / 2012 ஏப்ரல் 22 , மு.ப. 03:15 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஸரீபா,ரி,ஜிப்ரான்,எம்.சுக்ரி,லோஹித்)

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள 48 மீனவ சங்கங்களுக்கு நவீன மீன்பிடி உபகரணங்கள்  (பூலோக திசையறிகருவிகள்) வழங்கும் நிகழ்வு பேத்தாளை குகநேசன் கலாசார மண்டபத்தில் நேற்று சனிக்கிழமை நடைபெற்றது.

களுவன்கேணி, பேத்தாழை வாழைச்சேனை, கற்குடா, தளவாய், செட்டிபாளையம், சவுக்கடி போன்ற 48 மீனவ சங்கங்களுக்கு இவ் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன. அத்துடன், தினசரி மீன்பிடி தொழிலில் ஈடுபடுகின்ற மீனவர்களுக்கும் ஆழ்கடல் மீன்பிடியை மேற்கொள்கின்ற மீனவர்களுக்கும் இவ் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

இக்கருவிகளை பயன்படுத்தி மீன்களை இனங்காணல், கடல் மட்டத்தின் ஆழம் மற்றும் வெப்பநிலையயை அறிதல், குறைந்த காலத்தில் குறைந்த செலவில் தரமான அதிகளவான மீன்களை பிடிப்பது  இவ் உபகரணங்கள் வழங்கப்பட்டதன் நோக்கமாகும்.

பேத்தாளை மீன்பிடி கூட்டுறவுச் சங்கத் தலைவர் வீ.ரட்ணம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் பிரதம அதிதியாகவும்  கிழக்கு மாகாண மீன்பிடி அமைச்சின் பணிப்பாளர் எஸ்.சுதாகரன், கிழக்கு மாகாண மீன்பிடி அமைச்சின் திட்டப் பணிப்பாளர் ஆர்.ஞானசேகர் ஆகியோர் அதிதிகளாகவும் கலந்துகொண்டு கருவிகளை வழங்கி வைத்தனர்.

கிழக்கு மாகாண முதலமைச்சரின் சுமார்2.06மில்லியன்  நிதி ஒதுக்கீட்டில் வழங்கப்பட்ட இக்கருவிகள் தொடர்பான விளக்கங்;கள் பயனாளிகளுக்கு சர்வதேச மெரின் சேவைகள் தனியார் நிறுவனத்தின் அதிகாரிகளால் வழங்கப்பட்டன.  படங்கள்:-ஸரீபா



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .