2026 மே 04, திங்கட்கிழமை

மட்டு.வந்தாறுமூலையிலிருந்து மருத்துவ பீடத்துக்குத் தெரிவானவர்கள் கௌரவிப்பு

Kogilavani   / 2012 மே 01 , மு.ப. 07:44 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ரி.லோஹித்)

மட்டக்களப்பு வந்தாறுமூலை இந்து இளைஞர்மன்ற அறநெறிப் பாடசாலையின் வருடாந்த கௌரவிப்பு நிகழ்வு நேற்று திங்கட்கிழமை வந்தாறுமூலை விஷ்ணு மகா வித்தியாலய மண்டபத்தில் நடைபெற்றபோது, வந்தாறுமூலையில் மருத்துவ பீடத்துக்குத் தெரிவானவர்களும் அவர்களது பெற்றோரும் கௌரவிக்கப்பட்டனர்.

அறநெறிப்பாடசாலை ஆசிரியர் பி.சசிதரன் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில், கிழக்குப் பல்கலைக்கழக பதிவாளர் கே.மகேசன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார். கௌரவ அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட உதவி மாவட்ட செயலாளர் செல்வி ஜீ.நவரூபரஞ்சினி, ஆரையம்பதி சுகாதார வைத்திய அதிகாரி ஈ.சிறிநாத், சிறப்பு அதிதிகளாக மாவட்ட இந்து கலாசார அபிவிருத்தி உதவியாளர் திருமதி செல்வமலர் சிவலிங்கம், விஷ்ணு வித்தியாலய அதிபர் எஸ்.மோகன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இதன்போது, வந்தாறுமூலையில் இருந்து வைத்தியராக கடமையாற்றும் சிறிநாத்தின் தாயார் திருமதி இளையதம்பி, மருத்துவ பீடத்துக்குத் தெரிவான கிருஸ்ணப்பிள்ளை ஜெய்கிருஷ்ணாவின் தாய் தந்தையரான சிதம்பரப்பிள்ளை கிருஸ்ணப்பிள்ளை தம்பதியினரும் கௌரவிக்கப்பட்டனர்.

இதேவேளை, வந்தாறுமூலை விஷ்ணு ஆலய பிரதம குரு தெய்வேந்திரக் குருக்கள் மற்றும் நீர்முகப்பிள்யையார் ஆலய பிரதம குரு ஆகியோரும் கௌரவிக்கப்பட்டதுடன், அறநெறிப்பாடசாலை மாணவர்களுக்கு பரிசில்களும் வழங்கப்பட்டன.






  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .