2026 மே 04, திங்கட்கிழமை

வாகன விபத்தில் காத்தான்குடி நகர சபை எதிர்க்கட்சி தலைவர் படு காயம்

Super User   / 2012 மே 05 , மு.ப. 11:09 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.சுக்ரி, ஜிப்ரான், ஏ.எச்.ஏ. ஹுஸைன்)


காத்தான்குடி நகர சபையின் எதிர்க்கட்சி தலைவரும் நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் உறுப்பினருமான  பொறியிலாளர் எம்.எம்.அப்துர் றஹ்மான் பயணித்த வாகனம் பயணித்த வாகனம் ஏறாவூரில் வைத்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதனால் பொறியிலாளர் றஹ்மான் உட்பட இருவர் காயமடைந்துள்ளனர். திருகோணமலையிலிருந்து காத்தான்குடி நோக்கி பயணித்த கொண்டிருந்த போதே, குறித்த வேன் ஏறாவூர் பிரதான வீதியில் வைத்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த வேன் வேகமாக சென்று கடை ஒன்றுக்குள் புகுந்ததில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர். விபத்துக்குள்ளான மேற்படி வேன் முழுமையாக சேதமடைந்துள்ளதுடன் வேன் புகுந்த கடையும் சேதமடைந்துள்ளது என பொலிஸார் தெரிவித்தனர்.

இதில் காயமடைந்த காத்தான்குடி நகர சபை எதிர்க்கட்சி தலைவர் அப்துர் றஹ்மான் உட்பட இருவரும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .