2026 மே 04, திங்கட்கிழமை

காங்கேயனோடை பிரதான வீதியின் புனரமைப்பு பணிகள் ஆரம்பிப்பு

Kogilavani   / 2012 மே 07 , மு.ப. 04:06 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.சுக்ரி)

மட்டக்களப்பு மாவட்டத்தின் ஆரையம்பதி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள காங்கேயனோடை பிரதேசத்தின் பிரதான வீதியை புனரமைப்பு செய்யும் நடவடிக்கைகள் நேற்று ஞாயிற்றுக்கிழமை பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாவினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

விவாகப்பதிவாளர் ஏ.சி.எம்.தாஹாவின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், ஆரையம்பதி பிரதேச சபையின் பிரதி தவிசாளர் ஏ.சிவலிங்கம், பிரதேச சபை உறுப்பினர் எம்.மதீன் உட்பட அதிகாரிகள் பிரதேச முக்கியஸ்த்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

கடந்த ஆண்டு ஏற்பட்ட வெள்ள அனர்தத்தினால் இந்த காங்கேயனோடை பிரதான வீதி சேதமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .