2026 மே 04, திங்கட்கிழமை

ரணில் விக்கிரமசிங்க மட்டக்களப்பிற்கு விஜயம்

Suganthini Ratnam   / 2012 மே 11 , மு.ப. 10:10 - 0     - {{hitsCtrl.values.hits}}



(ரி.லோஹித், எம்.சுக்ரி)

ஐக்கிய தேசிய கட்சித் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க  மட்டக்களப்பு மாவட்டத்திற்கான விஜயத்தை  இன்று வெள்ளிக்கிழமை மேற்கொண்டுள்ளார். 

மட்டக்களப்பு  மாவட்ட மட்ட ஐக்கிய தேசியக் கட்சிக் கூட்டத்தில் கலந்துகொண்ட ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர்,  கட்சியின் எதிர்காலத் திட்டங்கள் மற்றும் முன்னேற்றங்கள் குறித்து கலந்துரையாடினார்.

கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஏ.சசிதரன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் கட்சியின் தேசிய அமைப்பாளரும் கிழக்கு மாகாணசபை எதிர்க்கட்சித் தலைவருமான தயா கமகே, நாடாளுமன்ற உறுப்பினர் இரான் விக்கிரமசிங்க, மாகாணசபை உறுப்பினர் எஸ்.மாசிலாமணி, மட்டக்களப்பு மாவட்ட முகாமையாளர் கே.லிங்கராஜா உட்பட பலர் கலந்துகொண்டனர்.

திருகோணமலை,  மட்டக்களப்பு மறைமாவட்ட ஆயர் கலாநிதி கிங்ஸ்லி சுவாம்பிள்ளையை ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் சந்தித்து கலந்துரையாடவுள்ளதுடன், மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூகத்தவர்களையும்  லயன்ஸ் கிளப் உறுப்பினர்களையும்  சந்திக்கவுள்ளார்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .