2026 மே 04, திங்கட்கிழமை

சிறுவனை கடத்த முற்பட்ட குற்றச்சாட்டில் நால்வர் கைது

Suganthini Ratnam   / 2012 மே 13 , மு.ப. 10:48 - 0     - {{hitsCtrl.values.hits}}


                                                                            (ஸரீபா,ரி.லோஹித்,ஆர்.அனுருத்தன்)

மட்டக்களப்பு மாவட்டத்தின்  வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சச்சியார் வீதியில் சிறுவனொருவனை இன்று  கடத்த முற்பட்டதாகக் கூறப்படும் 4 பேர்  வாழைச்சேனை பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

சிலாபத்தைச் சேர்ந்த இருவரும்; வழைச்சேனையைச் சேர்ந்த  இருவருமே கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இச்சிறுவனை வானில் ஏற்றியதை அவதானித்த நிலையில்  துரத்திய உறவினர்கள்,  உடனடியாக பொலிஸாருக்கு அறிவித்ததைத் தொடர்ந்து இவர்களை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

இன்று காலை கல்குடாவில் சிறுமியொருவரைக் கடத்த முயன்று முடியாதுபோன நிலையில்  பின்னர் இச்சிறுவனை கடத்த முயன்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கைதுசெய்யப்பட்டவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.


  Comments - 0

  • Raja Monday, 14 May 2012 02:21 AM

    Not in sachchiyar Vethy. It happened in Valaichenai In main road

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .