2026 மே 04, திங்கட்கிழமை

வாழைச்சேனையில் 'பயிர் சிகிச்சை முகாம்'

Suganthini Ratnam   / 2012 மே 16 , மு.ப. 02:54 - 0     - {{hitsCtrl.values.hits}}



(ஸரீபா)

விவசாய உற்பத்திகளின்போது பயிர்களுக்கு ஏற்படும் நோய்கள் பற்றி தெளிவுபடுத்தும் நோக்கில் 'பயிர் சிகிச்சை முகாம்'  என்னும் நடவடிக்கை  பிரதேசங்கள் தோறும் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.

விவசாயத் திணைக்களத்தின் ஏற்பாட்டில் மேற்கொள்ளப்பட்டுவரும் இந்நடவடிக்கையில் வாழைச்சேனை விவசாயப் பிரிவிலுள்ள கோறளைப்பற்று, கோறளைப்பற்று மத்தி, ஓட்டமாவடி ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளைச் சேர்ந்த பயிர் உற்பத்தியாளர்களுக்கான 'பயிர் சிகிச்சை முகாம்' நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இம்முகாமில் ஓட்டமாவடி பிரதேசசபைத் தவிசாளர் கே.பி.எஸ்.ஹமீட், கோறளைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி ரீ.தினேஸ், கோறளைப்பற்று உதவிப் பிரதேச செயலாளர் எஸ்.ராஜ்பாபு, கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக உதவித் திட்டமிடல் பணிப்பாளர் எச்.எம்.றுவைத், பயிர் பாதுகாப்பு உத்தியோகத்தர் வீ.லிங்கேஸ்வரன் ஆகியோர் கலந்துகொண்டனர். 




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .