2026 மே 04, திங்கட்கிழமை

தமிழரசுக் கட்சியின் மாநாடு திட்டமிட்ட படி நடைபெறும்

Super User   / 2012 மே 24 , பி.ப. 03:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எம்.சுக்ரி)

இலங்கை தமிழரசுக் கட்சியின் 14ஆவது தேசிய மாநாடு திட்டமிட்ட படி மட்டக்களப்பில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் என மாநாட்டு ஏற்பாட்டுக் குழு தலைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பொன் செல்வராசா தெரிவித்தார்.

'"மாநாடு நடைபெறவுள்ள மட்டக்களப்புஇ அரசடியிலுள்ள தேவநாயகம் மண்டபத்தில் இன்று மாலை தீப்பிடித்ததால் இந்த மண்டபத்தின் திரை சீலை மற்றும் மின் விசிறி ஆகியன எரிந்துள்ளன. இது தொடர்பான பொலிஸ் விசாரணைகள் நடைபெற்று வருகின்ற நிலையில் இது பற்றி எதுவும் கூற முடியாதுள்ளது.

எனினும், திட்டமிட்ட படி இலங்கை தமிழரசுக் கட்சியின் 14ஆவது தேசிய மாநாடு மட்டக்களப்பில் நடைபெறும்" என்றார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .