2026 மே 04, திங்கட்கிழமை

இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச்சபைக் கூட்டம்

Kogilavani   / 2012 மே 26 , மு.ப. 07:37 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ரி.லோஹித்)

இலங்கை தமிழரசுக் கட்சியின் 14 ஆவது தேசிய மாநாடு நாளை ஞாயிற்றுக்கிழமை நடைபெறுவதற்கு முன்னோடியாக இன்று காலை 9.45 மணியளவில், பொதுச் சபைக் கூட்டம் கட்சியின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் கட்சிக்கொடி ஏற்றப்பட்டு ஆரம்பமானது.

பழைய செயற்குழுவுக்கான கூட்டம் மட்டக்களப்பு ஊறணியில் உள்ள அமெரிக்க மிஷன் மண்டபத்தில் நேற்று வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து இன்று பொதுச்சபைக் கூட்டம் நடைபெறுகிறது.

இன்றைய கூட்டத்தில், தமிழரசுக் கட்சியின் அனைத்து கிளைகளையும் சேர்ந்த உறுப்பினர்கள், கிளைகளின் தலைவர்கள், செயலாளர்கள் என அனைவரும் கலந்து கொண்டனர்.

பொதுச் சபைக் கூட்டத்தில் பொதுச்செயலாளர் மாவை சேனாதிராசா, நிர்வாக செயலாளர் குகநாதன், பொருலாளர் எஸ்.ரி.ஆர்.தியாகராஜா, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினர்களான பொன் செல்வராசா, சரவணபவன், பா.அரியநேத்திரன், சுமந்திரன், சீ.யோகேஸ்வரன் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான கனகசபை, திருகோணமலை துரைரெட்ணசிங்கம், துரைராஜசிங்கம், ஜனாப் கே.எம்.இமாம், கொழும்பு கிளை தலைவர் சட்டத்தரணி கே.வி.தவராசா, செயலாளர் சு.வித்தியாதரன் எனப்பலரும் கலந்து கொண்டனர்.

இன்றைய பொதுச் சபைக் கூட்டத்தில், புதிய தலைவர், செயலாளர், செயற்குழு உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படுவதுடன் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள தேசிய மாநாட்டத் தீர்மானங்கள் தொடர்பிலும் இறுதித் தீர்மானங்களும் எடுக்கப்படவுள்ளன.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .