2026 மே 04, திங்கட்கிழமை

காத்தான்குடியில் எரியூட்டப்பட்ட ஸ்ரீ.மு.கா அலுவலகம் திறப்பு

Kogilavani   / 2012 மே 28 , மு.ப. 05:11 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.சுக்ரி)

காத்தான்குடியில் நேற்று முன்தினம் சனிக்கிழமை மாலை திறக்கப்படவிருந்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் கிளை அலுவலகம் இனந்தெரியாத நபர்களினால் தீவைத்து எரிக்கப்பட்ட நிலையில் மீண்டும் புனரமைப்பு செய்யப்பட்டு அன்று சனிக்கிழமை மாலையே ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவரும் நீதியமைச்சருமான றவூப் ஹக்கீமினால் திறந்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தவிசாளரும் பிரதியமைச்சருமான பசீர் ஷேகுதாவூத், கிழக்கு மாகாண சபை உறுப்பினர்காளன
யு.எல்.எம்.என்.முபீன், எம்.அப்துல் மஜீத் உட்பட முஸ்லிம் காங்கிரசின் முக்கியஸ்த்தர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

இவ் அலுவலம் தீ வைக்கப்பட்டதில் அலுவலக முன்பகுதி சேதமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .