2026 மே 04, திங்கட்கிழமை

கிழக்கு மாகாண பாற்பண்ணை தொழில் அபிவிருத்தி திட்டத்தின் நிறைவு வைபவம்

Suganthini Ratnam   / 2012 மே 30 , மு.ப. 09:26 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.சுக்ரி)

கிழக்கு மாகாண பாற்பண்ணை தொழில் அபிவிருத்தி திட்டத்தினை நிறைவு செய்யும் வைபவம் மட்டக்களப்பு மாவட்டத்தின் பாசிக்குடாவிலுள்ள அமத்திஸ் ஹோட்டலில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதன்போது இத்திட்டத்திற்கான அறிக்கை வெளியிடப்பட்டதுடன், இத்திட்டத்தினூடாக சிறப்பாக செயற்பட்ட பாற்பண்ணையாளர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. 

2009ஆம் ஆண்டு கிழக்கு மாகாணத்தில் ஆரம்பமான பாற்பண்ணை தொழில் அபிவிருத்தித் திட்டம் 3 வருடங்களாக செயற்பட்டது. 

யூ.எஸ்.எயிட் நிறுவனத்தின் உதவியுடனும் லேன்ட் ஓ லேக்ஸ் நிறுவனத்தின் அனுசரணையுடனும் செயற்பட்டுவந்த பாற்பண்ணை தொழில் அபிவிருத்தி திட்டத்தினை நிறைவு செய்யும் இன்றைய வைபவத்தில் யூ.எஸ்.எயிட் நிறுவனத்தின் சிரேஷ்ட ஆலோசகர் மார்க் லெப்பட், கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் கலாநிதி கிட்ணன் கோவிந்தராஜா, லேன் ஓ லேக்ஸ் நிறுவனத்தின் திட்ட முகாமையாளர் திருமதி வீவன் ஜோன், லேன்ட ஓ லேக் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி யு.எல்.ஜௌபர் சர்வோதயத்தின் கிழக்கு மாகாண இணைப்பாளர் இ.எல்.ஏ.கரீம் உட்பட பலர் கலந்துகொண்டனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .