2026 ஏப்ரல் 17, வெள்ளிக்கிழமை

ஐக்கிய தேசிய கட்சி பிரதிநிதிகள் - மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் சந்திப்பு

Super User   / 2012 ஓகஸ்ட் 13 , பி.ப. 03:17 - 0     - {{hitsCtrl.values.hits}}


(சிஹாரா லத்தீப், எம்.சுக்ரி)


ஐக்கிய தேசிய கட்சியின் தூதுக்குழுவினர் மட்டக்களப்பு மறை மாவட்ட  ஆயர் கிங்ஸ்லி சிவாம் பிள்ளையை இன்று திங்கட்கிழமை சந்தித்து கலந்துரையாடினர்.

ஆயரின் செயலகத்தில் நடைபெற்ற இச்சந்திப்பில் ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜோன் அமரதுங்க, ரவி கருணாநாயக்க, ஈரான் விக்ரமரதுங்க மற்றும் மகளிர் பிரிவு தலைவி  சாந்தினி  கோங்ஹகே ஆகியோர் கலந்துகொண்டனர்.

மட்டக்களப்ப  மாவட்ட  மக்களின்  இயல்பு  வாழ்க்கை, மாகாண சபை தேர்தல் உள்ளிட்ட பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.

இதேவேளை, இந்த தூதுக்குழுவினர் மட்டக்களப்பு மாவட்ட செயலத்திற்கு விஜயம் மேற்கொண்டு, மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் அசங்க ரத்ணாயக்காவை சந்தித்து பேச்சு நடத்தினர்.

தேர்தல் சட்ட விதிகளை ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு வேட்பாளர்கள் மற்றும் அமைச்சர்கள் மீறி செயற்படுவதாக மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளரிடம் முறைப்பாடு செய்துள்ளனர்.

தேர்தல் சட்ட விதிகளை மீறும் வகையில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட தலைமை வேட்பாளரும் முன்னாள் முதலமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தனின் பாரிய கட்டஅவுட்கள் வைக்கப்பட்டுள்ளதாகவும் உதவி தேர்தல் ஆணையாளரிடத்தில் சுட்டிக்காட்டப்பட்டது.

அத்துடன், விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே மாவட்டத்திலுள்ள விளையாட்டு கழகங்களின் பிரதிநிதிகளை அழைத்து தேர்தல் தொடர்பாக கலந்துரையாடியுள்ளதோடு விளையாட்டு உபகரணங்கள் வழங்குவதும் தேர்தல் சட்ட ஒழுங்கு விதிகளை மீறும் செயல் எனவும் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .