2026 ஏப்ரல் 14, செவ்வாய்க்கிழமை

நீரில் மூழ்கி இளம் குடும்பஸ்தர் மரணம்

Suganthini Ratnam   / 2012 ஓகஸ்ட் 19 , மு.ப. 07:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஏ.எச்.ஏ. ஹுஸைன் )

மட்டக்களப்பு, ஆயித்தியமலைப் பகுதியில் உள்ள மகிழவெட்டுவான் ஆற்றில் நேற்று சனிக்கிழமை நீராடிய இளம் குடும்பஸ்தர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

மகிழவெட்டுவான், கல்குடாப் பகுதியைச்  சேர்ந்த (வயது 36) தம்பாப்பிள்ளை கிருபைராசா என்பவரே இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார்.
மேசன் தொழில் செய்யும் இவர் நேற்றையதினம் மகிழவெட்டுவான் பொதுமயானத்தில் கல்லறை ஒன்றைக் கட்டிவிட்டு அருகிலிருந்த மகிழவெட்டுவான் ஆற்றில் நீராடியபோதே இவ்வாறு உயிரிழந்தார்.

இவர் 7.30 மணியாகியும் வீடு திரும்பாததால் உறவினர்கள் தேடிச்சென்றபோது,  ஆற்றங்கரையில் அவரது சைக்கிளும் மற்றும் ஏனைய உடைமைகளும் காணப்பட்டன. இதனை அடுத்து இவர் ஆற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார்.

நீரில் மூழ்கியதால் சுவாசம் தடைப்பட்டு மூச்சுத்திணறி மரணம் சம்பவித்துள்ளதாக பிரேத பரிசோதனை மரண விசாரணையில் தெரிவிக்கப்பட்டது. 

மாவட்ட வைத்திய அதிகாரி கே.சுகுமார் முன்னிலையில் பிரதேச திடீர் மரண விசாரண அதிகாரி எம்.எஸ்.எம்.நஸீர் மரண விசாரணையை நடத்தினார்.

இது தொடர்பான விசாரணை ஆயித்தியமலைப் பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .