2026 ஏப்ரல் 17, வெள்ளிக்கிழமை

காத்தான்குடியில் வீதி அபிவிருத்திப் பணிகள் ஆரம்பித்துவைப்பு

Suganthini Ratnam   / 2012 ஓகஸ்ட் 28 , மு.ப. 04:55 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.சுக்ரி)


'தேசத்துக்கு மகுடம்' (தயட்ட கிருல) அபிவிருத்தித் திட்டத்தின் கீழ், மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடிப் பிரதேசத்தில் பல்வேறு வீதி அபிவிருத்திப் பணிகளை பிரதி அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நேற்று திங்கட்கிழமை ஆரம்பித்துவைத்தார்.

200 இலட்சம் ரூபா செலவில் அல்-ஹூதா வீதி, ஹனீபா வீதி, மெத்தைப்பள்ளி வீதி, கமர்தீன் வீதி, ஹக்குப்பிள்ளை வீதி, பாம் வீதி உள்ளிட்ட வீதிகளுக்கான அபிவிருத்திப் பணிகள் ஆரம்பித்துவைக்கப்பட்டதாக பிரதி அமைச்சரின் ஊடக இணைப்பாளர் முகம்மட் சஜி தெரிவித்தார்.

காத்தான்குடி நகரசபைத் தலைவர் எஸ்.எச்.எம்.அஸ்பர் தலைமையில் நடைபெற்ற இதற்கான நிகழ்வில் முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கே.எல்.எம்.பரீட், காத்தான்குடி நகரசபை உறுப்பினர் எம்.எஸ்.எம்.சியாட் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .