2026 ஏப்ரல் 17, வெள்ளிக்கிழமை

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் ஏற்பாட்டில் தொழில் வழங்குனர் ஒன்று கூடல்

Super User   / 2012 ஓகஸ்ட் 28 , பி.ப. 05:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

                                                                           

                                                                                   (கே.எஸ்.வதனகுமார்)

மட்டக்களப்பு மாவட்டத்தில் தொழில் இன்றி உள்ள இளைஞர் யுவதிகளுக்கு எதிர்காலத்தில் தொழில் வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுக்கும் நோக்கில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள தொழில் வழங்குநர்களை உள்ளடக்கிய தொழில் வழங்குனர் ஒன்று கூடல் இன்று நடத்தப்பட்டது.

சத்துருக்கொண்டான் சர்வோதய கட்டடத்தில் மாவட்ட உதவிப் பணிப்பாளர் ஏ.ஜி.ஏ.கபூர் தலைமையில் நடைபெற்ற இந்த ஒன்றுகூடலில் மாவட்ட செயலக திட்டமிடல் பணிப்பாளர் இரா.நெடுஞ்செழியன் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டார்.

சிறப்பு விருந்தினராக தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் கிழக்கு மாகாணப் பணிப்பாளர் கே.தவராசா கலந்து கொண்டார். இதன் போது மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள தொழில் வழங்கக் கூடிய அரச, அரச சார்பற்ற நிறுவனங்கள், வங்கிகள், காப்புறுதிக் கூட்டுத்தாபனங்கள், தொழில் பயிற்சி நிலையங்கள், ஆடைத் தொழிற்சாலைகள் என்பவற்றின் பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இவ் ஒன்று கூடலில் பெற்றுக்கொண்ட தகவல்களின் அடிப்படையில் வேலையற்ற இளைஞர் யுவதிகளுக்கான வேலையினைப் பெற்றுக் கொடுப்பதற்கான தொழிற் சந்தை நடாத்தப்படவுள்ளதாக உதவிப் பணிப்பாளர் தெரிவித்தார்.




 



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .