2026 ஏப்ரல் 17, வெள்ளிக்கிழமை

கபே அமைப்பின் தேர்தல் கண்காணிப்பாளர்களுக்கான ஒன்றுகூடல்

Super User   / 2012 ஓகஸ்ட் 30 , மு.ப. 10:57 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.சுக்ரி)


சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கமான கபே அமைப்பின் கிழக்கு மாகாண சபை தேர்தலில் கண்காணிப்பாளர்களுக்கான ஒன்றுகூடல் இன்று வியாழக்கிழமை மட்டக்களப்பு கல்லடியிலுள்ள பிறிட்ச் விவ் விடுதியில் நடைபெற்றது.

இதில் கபே அமைப்பின் கிழக்கு மாகாண இணைப்பாளர் மனாஸ் மக்கீன், கபே அமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் ஏ.எச்.ஏ.ஹுஸைன், திருகோணமலை மாவட்ட இணைப்பாளர் றஊப் முஹம்மது ஹாபீழ், கபே அமைப்பின் சட்ட ஆலோசகர்களான ஹரேந்திர பானகல, நிரோசன் பண்டார உட்பட சமய பிரமுகர்கள், மட்டக்களப்பு திருகோணமலை, மற்றும் அம்பாறை ஆகிய மாவட்டங்களிலுள்ள தேர்தல் கண்கானிப்பாளர்களும் கலந்துகொண்டனர்.

இதன்போது கிழக்கு மாகாண சபை தேர்தலில் கண்காணிப்பு நடவடிக்கைகள் தொடர்பாக விரிவாக விளக்கப்பட்டன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .