2026 ஏப்ரல் 14, செவ்வாய்க்கிழமை

மட்டு. மாவட்ட சுயேட்சைக்குழு வேட்பாளர் ஒருவர் மீது தாக்குதல்; பொலிஸில் முறைப்பாடு

Menaka Mookandi   / 2012 செப்டெம்பர் 08 , பி.ப. 12:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எம்.சுக்ரி)

கிழக்கு மாகாணசபை தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் சுயேட்சைக்குழுவாக போட்டியிடும் நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் வேட்பாளர் எம்.மிஹ்ளார், தாக்குதலுக்கு உள்ளான நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இன்று காத்தான்குடி அல்ஹிறா வித்தியாலய வாக்குச்சாவடியில் வைத்து இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

காத்தான்குடி நகரசபை ஆளுங்கட்சி உறுப்பினர் ஒருவரினால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
 
மேற்படி தாக்குதல் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாக காத்தான்குடி பொலிஸார் மேலும் தெரிவித்தனர். 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .