2026 ஏப்ரல் 14, செவ்வாய்க்கிழமை

மட்டக்களப்பு மாவட்ட விருப்பு வாக்குகளின் விபரம்

Super User   / 2012 செப்டெம்பர் 09 , மு.ப. 08:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எம்.சுக்ரி, ஜவீந்திரா)
 
கிழக்கு மாகாண சபை தேர்தலின் மட்டக்களப்பு மாவட்ட விருப்பு வாக்குகள் இன்று ஞாயிற்றுக்கிழமை நண்பகல் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கினங்க, இலங்கை தமிழரசுக் கட்சி சார்பில் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இரா. துரைரெத்தினம் 29,148 வாக்குகளையும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே. துரைராஜசிங்கம் 27,719 வாக்குகளையும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வெள்ளிமலை என்று அழைக்கப்படும் ஞா.கிருஷ்ணபிள்ளை 20,200 வாக்குகளையும் வர்த்தகர் இந்திரகுமார் பிரசன்னா 17,304 வாக்குகளையும் முன்னாள் மக்கள் வங்கி முகாமையாளர் மா.நடராசா 16,681 வாக்குகளையும் ஜனா என்று அழைக்கப்படும் கோ.கருணாகரன் 16,536 வாக்குகளையும் பெற்று தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு சார்பாக முன்னாள் முதலமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தன் 22,338 வாக்குகளையும் முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.அமீரலி 21,271 வாக்குகளையும் பொறியியலாளர் சிப்லி பாரூக் 20,407 வாக்குகளையும், முன்னாள் மாகாண அமைச்சர் எம்.எஸ்.சுபையிர் 19,303 வாக்குகளையும்  பெற்று மாகாண சபை உறுப்பினர்களாக தெரிவாகியுள்ளனர்.

அத்துடன் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக அக்கட்சியின் பிரதி தலைவர் ஹாபீஸ் நஷீட் அஹமட் 11,401 வாக்குகளை பெற்று தெரிவு செய்யப்பட்டுள்ளார்.  இந்நிலையில் கொழும்பு மாநகர முன்னாள் பிரதி மேயர் அசாத் சாலி 6,436 வாக்குகளை பெற்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்  பட்டியலில் இரண்டாமிடத்தினை பெற்றுள்ளார்.

  Comments - 0

  • meenavan Sunday, 09 September 2012 09:48 AM

    ஐக்கிய சுதந்திர கூட்டமைப்பின் அதி கூடிய விருப்பு வாக்குகள் பெற்ற பிள்ளையான் மீண்டும் முதலமைச்சர்....?

    Reply : 0       0

    AJ Sunday, 09 September 2012 10:30 AM

    யார் அதி கூடிய வாக்குகள் பெறுகிறார்களோ அவர்களே முதலமைச்சர்
    வாழ்த்துக்கள் சந்திரகாந்தன். (ஹிக்கீம் எப்படியும் அரசுடன் தான் போவர். இதை முஸ்லிம் உலமா கட்சி உட்பட அனைவருமே தேர்தலுக்கு முன்னர் இருந்தே சொல்லி வந்தார்கள். அவர்களின் கோரிக்கை முதலமச்சர். ஆனால் ஹிக்கீம் போட்ட கணக்கு இப்போது ??? :P

    Reply : 0       0

    MADURANKULI KURANKAR Sunday, 09 September 2012 05:28 PM

    ஒரு முஸ்லிம் முதல் அமைச்சராக வர முடியாதா?

    Reply : 0       0

    kaleel meeralebbe Monday, 10 September 2012 01:19 AM

    அது இணையும் கட்சியை பொருத்தது. அல்ல ஆட்சி அமைக்க இணைவோரை பொருத்தது.

    Reply : 0       0

    kaleel meeralebbe Monday, 10 September 2012 01:23 AM

    அது அரசுடன் இனைவோரைப்பொருத்தது

    Reply : 0       0

    Haniff Monday, 10 September 2012 06:10 AM

    ஊழல் அற்ற தலைமைத்துவமுள்ள முன்மாதிரியான நல்லதோர் மாகாண சபை அமைய வேண்டுமெனெ பிரார்த்திக்கிறேன்.

    Reply : 0       0

    Haniff Monday, 10 September 2012 06:24 AM

    நல்ல தலைமைத்துவமுள்ள முதலமச்சர்தான் இன்றைய தேவை, பொம்மைகள் அல்ல..

    Reply : 0       0

    Rasheed.M.A.A Monday, 10 September 2012 07:14 AM

    முஸ்லிம் காங்கிரஸ் சரியான தீர்மானம் எடுக்கும்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .