2026 ஏப்ரல் 17, வெள்ளிக்கிழமை

மட்டக்களப்பில் நாளை எட்டரை மணி நேர மின் துண்டிப்பு

Super User   / 2012 செப்டெம்பர் 12 , மு.ப. 10:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எம்.சுக்ரி)

மட்டக்களப்பில் நாளை வியாழக்கிழமை எட்டரை மணி நேர மின் துண்டிப்பு இடமபெறும் என இலங்கை மின்சார சபையின் மட்டக்களப்பு மின் பொறியியலாளர் அலுவலகம் அறிவித்துள்ளது.

மின்சார சபையின் பராமரிப்பு வேலைகள் நடைபெற இருப்பதனாலேயே மின் துண்டிப்பு இடம்பெறுவதாக மின் பொறியியலாளர் அலுவலகம் அறிவித்துள்ளது.

இதனால் நாளை வியாழக்கிழமை காலை 8.30 மணி தொடக்கம் மாலை 5.00 மணி வரை லேக் வீதி, நல்லையா வீதி, வைத்தியசாலை வீதி, புதூர், திமிலைதீவு, வலையிறவு,  வவுணதீவு தொடக்கம் தாண்டியடி மற்றும் வவுணதீவு தொடக்கம் நாவற்காடு ஆகிய பிரதேசங்களில் மின் வெட்டு அமுல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .