2026 ஏப்ரல் 15, புதன்கிழமை

இஸ்லாத்துக்கு எதிரான அமெரிக்க திரைப்படத்துக்கு பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் கண்டனம்

A.P.Mathan   / 2012 செப்டெம்பர் 22 , பி.ப. 04:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

புனித இஸ்லாம் மதத்தினையும் எம் பெருமானார் (ஸல்) அவர்களையும் இழிவுபடுத்தும் நோக்கில் தயாரிக்கப்பட்ட திரைப்படத்திற்கு சிறுவர் அபிவிருத்தி மகளிர் விவகார பிரதி அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் தமது வன்மையான கண்டனத்தை வெளியிட்டுள்ளார்.

பிரதியமைச்சரின் ஊடகப் பிரிவு அனுப்பி வைத்துள்ள செய்திக் குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளவையாவன...

மேற்கத்தேய நாடுகளின் இஸ்லாம் மதத்திற்கும் இஸ்லாமியர்களுக்கும் எதிராக இதுபோன்ற தொடர்ச்சியான காழ்புணர்ச்சிகளை விஷமிகள் மேற்கொண்டு வருவதை முஸ்லிம்களாகிய நாம் இனியும் பொறுத்திருந்து சகிக்க முடியாது. இத்தகைய இழி நிலையை - திரைப்படத்தின் மூலம் தயாரித்த இத்திரைப்படத்தின் தயாரிப்பாளர், இத்திரைப்படத்தை வெளியீடு செய்ய உதவிய அனுசரணையாளர்கள் மற்றும் இத்திரைப்படம் காட்சியினை ஒளிபரப்பிய ஊடகங்கள் இவை அனைத்துக்கும் எதிரான சட்ட நடவடிக்கை மேற்கொள்வதோடு இத்தகையவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி பகிரங்கமாக தண்டிக்கப்பட வேண்டும் என்பதுடன், இத்தகையோர்களுக்கு வழங்கும் தண்டனைகள் இனிவரும் காலங்களில் இஸ்லாத்துக்கும் இஸ்லாமியர்களுக்கும் எதிராக சதி திட்டங்களை மேற்கொள்ள காத்திருக்கும் அனைவருக்கும் இது ஒரு சாட்டை அடியாக அமையும் என்பதுடன் இவ்வாறான ஈனச் செயல்களில் ஈடுபட்டோர்கள் உடன் தண்டிக்கப்படாதவிடத்து தொடர்ந்தும் உலக முஸ்லிம்களின் ஆக்ரோஷமான போராட்டங்கள் ஓயப் போவதில்லை எனவும் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் தனது கண்டன அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .