2026 ஏப்ரல் 15, புதன்கிழமை

சிங்களமொழி பயிற்சியை பூர்த்திசெய்த அரச உத்தியோகத்தர்களுக்கு சான்றிதழ்கள்

Suganthini Ratnam   / 2012 செப்டெம்பர் 28 , மு.ப. 07:43 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.சுக்ரி)


மட்டக்களப்பில் சிங்கள மொழிப்பயிற்சியை முடித்த அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு சான்றிதழ் வழங்கும் வைபவம் இன்று வெள்ளிக்கிழமை மட்டக்களப்பு பொது நூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

தேசிய மொழிகள் மற்றும் ஒழுங்கமைப்பு அமைச்சின் கீழுள்ள தேசிய மொழிக் கல்வி பயிற்சி நிறுவகமும் கிழக்கு மாகாண முகாமைத்துவ அபிவிருத்தி நிறுவனமும் இணைந்து சிங்கள மொழிப் பயிற்சியை நடத்தின.

10 தினங்களாக நடைபெற்ற சிங்கள மொழிப் பயிற்சியை பூர்த்தி செய்த 55 பேருக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ், தேசிய மொழிகள் மற்றும் ஒழுங்கமைப்பு அமைச்சின் மேலதிக செயலாளர் எம்.பாஸ்கரன், தேசிய மொழிக் கல்வி பயிற்சி நிறுவகத்தின் உதவிப் பணிப்பாளர் இ.கோபினாத், அமைச்சின் அதிகாரிகள், தேசிய மொழிக் கல்வி பயிற்சி நிறுவகத்தின் அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .