2026 ஏப்ரல் 14, செவ்வாய்க்கிழமை

தவளக்குடா கிராம மக்களின் குறைநிறைகள் ஆராய்வு

Suganthini Ratnam   / 2012 நவம்பர் 25 , மு.ப. 03:07 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஹனீக் அஹமட்)


மட்டக்களப்பு மாவட்டத்தின் புன்னக்குடா பிரதேசத்திலுள்ள தவளக்குடா மீனவர் கிராமத்துக்கு நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை விஜயம் செய்த கிழக்கு மாகாண அமைச்சர் ஹாபீஸ் நஸீர் அஹமட்,  அங்குள்ள மக்களின் குறைநிறைகளைக் கேட்டறிந்துகொண்டார்.

தொழில் ரீதியாக தவளக்குடா கிராமத்தில் படகு இறங்கு துறையொன்று அமைய வேண்டியதன் அவசியம் குறித்து அமைச்சரிடம் மக்கள் சுட்டிக்காட்டினர்.

தவளக்குடா மக்களின்  குறைநிறைகள் மற்றும் அவர்களின்  தேவைகளையும் கேட்டறிந்த கிழக்கு மாகாண அமைச்சர்,  இவற்றுக்குரிய தீர்வுகளைப் பெற்றுத்தருவதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்வதாகத் தெரிவித்தார்.

இதேவேளை, பாசிக்குடா கடற்கரையிலிருந்து தவளக்குடா கிராமம் கண்ணுக்கெட்டிய தூரத்தில் அமைந்துள்ளதால் சுற்றுலாத்துறை சார்ந்த பகுதியாக இக்கிராமத்தை மாற்றுவதற்கு வாய்ப்புள்ளதையும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். 

தவளக்குடா மீனவர் கிராமத்தில் சுமார் 50 இற்கும் மேற்பட்ட தமிழ்க் குடும்பங்கள் வாழ்கின்றன.  இருப்பினும்  இவர்களுக்குரிய அடைப்படை வசதிகள் எதுவும் இதுவரையில் செய்து கொடுக்கப்படவில்லையெனத் தெரிவிக்கப்படுகிறது.  குடிநீர், மின்சாரம் மற்றும் மலசலகூட வசதிகளின்றி  இக்கிராம மக்கள் பெரும் சிரமத்தை எதிர்நோக்குகின்றனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .