2026 ஏப்ரல் 25, சனிக்கிழமை

வெள்ள அனர்த்த நிலை தொடர்பிலான கலந்துரையாடல்

Kogilavani   / 2012 டிசெம்பர் 20 , பி.ப. 01:06 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.சுக்ரி)

மட்டக்களப்பு மாவட்டத்தின் வெள்ள அனர்த்த நிலை தொடர்பாகவும் மக்களுக்கான நிவாரண நடவடிக்கைகள் தொடர்பாகவும் ஆராயும் கலந்துரையாடல் ஒன்று பிரதியமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாவின் தலைமையில் பிரதியமைச்சரின் காத்தான்குடி அலுவலகத்தில் இன்று காலை நடைபெற்றது.

இதில் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் ஜனாதிபதியின் ஆலோசகரும் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் உட்பட முக்கியஸ்த்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

இதன்போது மட்டக்களப்பு மாவட்டத்தின் வெள்ள அனர்த்த நிலைமை தொடர்பாக கலந்துரையாடப்பட்டதுடன் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரண நடவடிக்கைகளை துரிதப்படுத்துவது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டதாக பிரதியமைச்சரின் ஊடக இணைப்பாளர் முகம்மட் சஜி தெரிவித்தார்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .