2026 ஏப்ரல் 25, சனிக்கிழமை

மட்டக்களப்பு மக்களுக்கு நிவாரண உதவி

Suganthini Ratnam   / 2012 டிசெம்பர் 21 , மு.ப. 05:01 - 0     - {{hitsCtrl.values.hits}}


(கே.எஸ்.வதனகுமார், எம்.சுக்ரி, ஐதுசன், ஜிப்ரான்,
ரி.லோஹித்,ஜவீந்திரா )

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக கடும் மழை பெய்துவந்த நிலையில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட போரதீவுப்பற்று செயலாளர் பிரிவுக்குட்பட்ட வேத்துச்சேனை, பட்டாபுர கிராம மக்களுக்கு நேற்று வியாழக்கிழமை நிவாரணங்கள் வழங்கப்பட்டன.

பெரிய போரதீவு பாரதி வித்தியாலத்தில் தஞ்சமடைந்துள்ள இம்மக்களை சென்று பார்வையிட்ட கிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சரும் ஜனாதிபதியின் ஆலோசகரும் கிழக்கு மாகாணசபையின் உறுப்பினருமான சிவநேசத்துரை சந்திரகாந்தன் இவர்களுக்கு நிவாரணங்களை வழங்கிவைத்தார்.

பால்மா, பிஸ்கட் உள்ளிட்ட உலர் உணவுப்பொருட்களுடன் பாய்களும் வழங்கப்பட்டன.

இதன்போது போரதீவுப்பற்று பிரதேச சபையின் தவிசாளர் ஸ்ரீதரன் முன்னாள் கிழக்கு மாகாண சபையின் உறுப்பினர் பூ.பிரசாந்தன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இதேவேளை, பிரதேச செயலாளர் வில்வரட்ணம், மாவட்ட அனர்த்த நிவாரண உதவிப் பணிப்பாளர் இன்பராஜா, அரசசார்பற்ற நிறுவன அதிகாரி ஜேசு ஆகியோரும் வேத்துச்சேனை மக்களுக்கு நிவாரணப்பொருட்களை வழங்கி வைத்தனர். 

இதற்கிடையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால்  பாதிக்கப்பட்டு இடைத்தங்கல் முகாமிலுள்ளவர்களுக்கு கனடா வாழவைப்போம் அமைப்பு மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை ஊடாக நேற்று வியாழக்கிழமை அவசர உதவிகளை வழங்கியுள்ளது.
 
செங்கலடி,  கோறளைப்பற்று, கிரான் ஆகிய பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள இடைத்தங்கல் முகாம்களிலுள்ளவர்க்களுக்கு இவ் உதவிகள் வழங்கப்பட்டன. மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையின் தலைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான சீ.யோகேஸ்வரன் தலைமையில் இவ் உதவிகளை வழங்கப்பட்டன.







  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .