2026 ஏப்ரல் 25, சனிக்கிழமை

வெள்ளத்தால் பாதிக்கபட்ட வீதிகளை துப்புறவு செய்யும் பணிகள் ஆரம்பிப்பு

Kogilavani   / 2012 டிசெம்பர் 21 , மு.ப. 06:13 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஜிப்ரான்)

மட்டக்களப்பில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட வீதிகளை துப்புறவு செய்யும் பணிகள் இன்று வெள்ளிக்கிழமை காலை முதல் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

வெள்ளம் காரணமாக பெரிதும் பாதிக்கப்பட்ட மட்டக்களப்பு- கொழும்பு பிரதான வீதி, பிள்ளையாரடி ஊறணி தன்னாமுனை பிரதான வீதிகள் வீதி அபிவிருத்தி அதிகார சபையினால துப்;புறவு செய்யப்பட்டு வருகின்றன.

மட்டக்களப்பு வாவி பெருக்கெடுத்தமையால் இப்பிரதான பாதை நீரினால் மூழ்கியிருந்தது. இதனால் வாவியின் ஆற்று வாழைகள் உட்பட கழிவுகள் வீதியின் நடுவே குவிந்து காணப்பட்டதுடன் போக்குவரத்திற்கும் தடையை ஏற்படுத்தி இருந்தன.

இவற்றினை அகற்றி வீதியை துப்புறவு செய்யும்; பணிகள் தற்போது இடம்பெற்று வருகின்றன.






  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .