2026 ஏப்ரல் 25, சனிக்கிழமை

வாவியில் காணாமல் போன மீனவர்களின் குடும்பங்களுக்கு பண உதவி

Suganthini Ratnam   / 2012 டிசெம்பர் 21 , மு.ப. 08:19 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.சுக்ரி)


காங்கேயனோடை வாவியில் மீன்பிடித்துக்கொண்டிருந்தபோது தோணி கவிழ்ந்து வாவியில் காணாமல் போன இரண்டு மீனவர்களின்
குடும்பங்களுக்கும் காத்தான்குடி பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தால் நிதியுதவி வழங்கப்பட்டன.

ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா 10,000 ரூபா நேற்று வியாழக்கிழமை வழங்கப்பட்டதாக காத்தான்குடி பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தின் செயலாளர் மௌலவி ஏ.எம்.அப்துல்காதர் தெரிவித்தார்.

சம்மேளனத்தின் பொருளாளர் எம்.பாயிஸ் மற்றும் செயலாளர் மௌலவி அப்துல் காதர், உறுப்பினர் மௌலவி நாசர் ஆகியோர் சென்று இந்த உதவியை வழங்கி வைத்தனர்.

கடந்த திங்கட்கிழமை காங்கேயனோடை வாவியில் இவ்விரண்டு மீனவர்களும் காணாமல்போயிருந்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .