2026 ஏப்ரல் 25, சனிக்கிழமை

கூரை தகரங்களை தந்துதவுமாறு கோப்பாவெளி மக்கள் கோரிக்கை

Kogilavani   / 2012 டிசெம்பர் 22 , மு.ப. 06:03 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ரி.லோஹித்)

செங்கலடி பதுளை வீதி, கோப்பாவெளியில் அண்மையில் வீசிய சுழல்;காற்றினால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்களது இருப்பிடங்களினை அமைத்தக் கொள்வதற்கு கூரை தகரங்களை தந்துதவுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இக்கிராமத்தில் வீசிய சுழல் காற்றுக்காரணமாக 7 வீடுகள் வரை சேதமடைந்ததுடன் கோப்பாவெளி முதல் புல்லுமலை வரையில் காணப்பட்ட பெருமளவான மரங்களும் அழிவடைந்துள்ளளன. இதேவேளை,   கால்நடைகளும் பாதிக்கப்பட்டுள்ளன.

இக் காற்றுக்காரணமாக மயிரிழையில் உயிர்தப்பிய மக்கள் கோப்பாவெளி அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கு மூன்று நாட்களுக்கான ஒரு தொகுதி உலர் உணவுகளை கிராமசேவையாளர் வழங்கியுள்ளதுடன், மழை நின்றவுடன் தங்களது இருப்பிடங்களுக்குச் செல்லுமாறு பணித்துள்ளார்.

இந்நிலையில், தமது இருப்பிடங்கள் பிடுங்கி எறியப்பட்ட நிலையில உள்ள மக்கள் வீடுகளை அமைப்பதற்கான கூரைத் தகரங்களை தந்துதவறுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடந்த கால யுத்தத்தில் பாதிக்கப்பட்டு பல்வேறு இடங்களில் நீண்ட காலமாக வழ்ந்த கோப்பாவெளி பிரதேச மக்கள் 2008ஆம் ஆண்டுக்கு பின்னர் மீளக் குடியமர்த்தப்பட்டிருந்தனர்.

இருப்பினும் இவர்களில் அதிகமானவர்கள் தற்போதும், அச்சந்தர்ப்பத்தில்; வழங்கப்பட்ட தற்காலிக இருப்பிடங்களிலேயே வசித்து வருகின்றனர்.
இதேவேளை இம்மக்கள் காட்டு யானைகளின் தொல்லைகளுக்கும் உட்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .