2026 ஏப்ரல் 25, சனிக்கிழமை

மட்டு. மினி சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கூடாரங்கள் கையளிப்பு

Menaka Mookandi   / 2012 டிசெம்பர் 22 , பி.ப. 01:29 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ரி.லோஹித்)


மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பிரதேசத்தின் மினிசூறாவளியினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தற்காலிக கூடாரங்கள் உட்பட பொருட்கள் வழங்கப்பட்டன.

ஹிரிட்டாஸ் எகட் அமைப்பின் மட்டு.அம்பாறை மாவட்டங்களின் பணிப்பாளர் அருட்தந்தை கிரைஸ்ட்டன் அவுஸ்கோனின் ஏற்பாட்டின் கீழ் இந்த உதவிப்பொருட்கள் வழங்கப்பட்டன.

களுவாஞ்சிகுடி பிரதேச செயலாளர் சுதாகர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தற்காலிக கூடாரங்கள், பாய், பெட்சீட் ஆகிய பொருட்கள் வழங்கப்பட்டன.

கடந்த செவ்வாய்க்கிழமை களுவாஞ்சிகுடி பிரதேசத்துக்குட்பட்ட மகிளூர், கண்ணகிபுரம், குருமண்வெளி, ஓந்தாச்சிமடம், களுவாஞ்சிகுடி ஆகிய பகுதிகளில் வீசிய மினிசூறாவளி காரணமாக 490 வீடுகள் சேதமடைந்ததுடன் 52 வீடுகள் முழுமையான சேதமடைந்தன.

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த இரு நாட்களாக ஓய்ந்திருந்த மழை மீண்டும் பெய்ய ஆரம்பித்துள்ளதால் பாதிக்கப்பட்ட மக்களின் நலன் கருதி ஹிரிட்டாஸ் எகட் அமைப்பு இந்த உதவியை வழங்கியுள்ளது.

முதல் கட்டமாக கண்ணகிபுரம் மற்றும் குருமண்வெளியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான பொருட்கள் வழங்கப்பட்டன. இந்நிகழ்வில் ஹிரிட்டாஸ் எகட் அமைப்பின் பிரதிநிதிகள் உட்பட கிராமசேவையாளர்கள்,கிராம அபிவிருத்தி சங்க உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .