2026 ஏப்ரல் 25, சனிக்கிழமை

திறப்பு விழாவுக்கு காத்தான்குடி அரசியல் பிரமுகர்களுக்கு அழைப்பில்லை: மட்டு.மாநகரசபை உறுப்பினர் கண்ட

Kanagaraj   / 2012 டிசெம்பர் 23 , மு.ப. 02:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜிப்ரான்

மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் புதிய கட்டிட திறப்பு விழாவுக்கான அதிதிகளில் காத்தான்குடி அரசியல் பிரமுகர்கள் புறக்கணிக்கப்பட்டதற்கு தனது வன்மையான கண்டனத்தை தெரிவிப்பதாக மட்டக்களப்பு மாநகர சபையின் உறுப்பினர் என்.கே. றம்ழான் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் யுனிசொப் நிறுவனத்தின் நிதி ஒதுக்கீட்டில் மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திற்கான புதிய கட்டிடம் முழுமையாக பூரத்;தி செய்யப்படாத நிலையில் எதிர் வரும் 24ம் திகதி திறந்து வைப்பதற்கான ஏற்பாடுகளை மட்டக்களப்பு மத்தி வலயத்தின் வலயக்கல்விப்பணிப்பாளர் மேற்கொண்டுள்ளார்.

தான் ஓய்வு பெறுவதற்கு இன்னும் ஓரிரு தினங்களே எஞ்சியிருக்கின்ற நிலையில் குறித்த கட்டிடம் முழுமையாக கட்டிமுடிக்காத போதிலும் அதனை திறந்து வைப்பதற்காக இரண்டு வகையான அழைப்புகள் கல்விப்பணிப்பாளரினால் அச்சியிடப்பட்டு வினியோகிக்கப்பட்டுள்ளன.

 அவ்விரண்டு அழைப்புக்களிலும் காத்தான்குடியைச் சேர்ந்த எந்தவொரு அரசியல் பிரமுகரின் பெயர்களும் அதிதியாக உள்வாங்கப்படாமல் காத்தான்குடி கல்விக் கோட்டம் வலயக் கல்விப்பணிப்பாளரினால் முழுமையாக புறக்கணிக்கப்பட்டுள்ளது. அதற்கு எனது வன்மையான கண்டனத்தை தெரிவிக்கின்றேன்.

மட்டக்களப்பு மத்தி கல்வி வலயம் காத்தான்குடி, ஏறாவூர், ஓட்டமாவடி போன்ற முஸ்லிம் பிரதேசங்களை உள்ளடக்கியதாக உருவாக்கப்பட்டாலும் ஏனைய பிரதேசங்களை விட அதிகளவிலான எண்ணிக்கையுடைய தனி கல்வி வலயம் ஒன்றினை பெற்றுக் கொள்ளக் கூடிய 31 பாடசாலைகள் காத்தான்குடிப் பிரதேசத்தில் காணப்படுகின்றன.

இப்பிரதேசத்தில் ஒரு பிரதியமைச்சரும் ஒரு மாகாண சபை உறுப்பினரும் இருக்கின்ற போதிலும் அவர்களில் ஒருவரேனும் அதிதியாக அழைக்கப்படாமல் புறக்கணிக்கப்படதானது ஒட்டு மொத்த காத்தான்குடி  கல்விச் சமூகத்தினையும் புறக்கணித்தற்கு சமனானதாகும் அன்று தொடக்கம் இன்று வரையும் காத்தான்குடி கல்விக் கோட்டம் வலயக் கல்விப்பணிப்பாளரினால் திட்டமிட்டு புறக்கணிக்கப்பட்டு வருகின்றது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .