2025 ஓகஸ்ட் 21, வியாழக்கிழமை

மண்முனை தென்மேற்கு பிரதேச சபைக்கு புதிய அலுவலகக் கட்டிடம்

Kogilavani   / 2012 டிசெம்பர் 29 , மு.ப. 05:58 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ரி.லோஹித், ஜிப்ரான்)

மட்டக்களப்பு, மண்முனை தென்மேற்கு (கொக்கட்டிச்சோலை) பிரதேச சபைக்கு புதிய அலுவலகக் கட்டிடம் அமைக்கப்படவுள்ளது.

இதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்று வெள்ளிக்கிழமை பிரதேச சபையின் தவிசாளர் ரி.பேரின்பராஜா தலைமையில் இடம்பெற்றது.
புறநெகும திட்டத்தின் கீழ் 4கோடி ரூபாய் செலவில் அதிநவீன வசதிகளுடன் இக் கட்டிடம் நிர்மாணிக்கப்படவுள்ளது,
கட்டிடத்திற்கான அடிக்கல்லை முன்னாள் முதலமைச்சரும் கிழக்கு மாகாண சபையின் உறுப்பினரும் ஜனாதிபதியின் ஆலோசகருமான சிவநேசதுரை சநதிரைகாந்தன் நாட்டி வைத்தார்.

இந்நிகழ்வில் பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரெட்ணம், பிரதேச சபையின் பிரதி தவிசாளர்;; உட்பட பலரும் கலந்து கொண்டார்கள்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X