2026 மே 04, திங்கட்கிழமை

மட்டக்களப்பு வீதிகளில் வெள்ளம்; போக்குவரத்து பாதிப்பு

Menaka Mookandi   / 2013 ஜனவரி 26 , மு.ப. 07:11 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஜவீந்திரா


மட்டக்களப்பு மாவடத்தில் தொடர்ந்து நான்கு நாட்களாக பெய்து வந்த பலத்த அடை மழை நேற்று வெள்ளிக்கிழமை இரவு முதல் ஓய்ந்துள்ள நிலையில் மாவட்டத்தின் நிலைமை வழமைக்கு திரும்பியுள்ளது.

இருந்தபோதிலும் மாவடத்தின் படுவான்கரைக்குச் செல்லும் பிரதான போக்குவரத்து வீதிகளில் ஒன்றாகக் காணப்படுககின்ற பட்டிருப்பு வெல்லாவெளி வீதியினை ஊடறுத்து மடடக்களப்பு வாவியினை நோக்கி வெள்ளநீர் ஓடுவதனால் இவ்வீதியுடனான போக்குவரத்து ஸ்தம்பிதமடைந்து காணப்படுகின்றது.

இது இவ்வாறு இருக்க மண்டூர் - வெல்லாவெளி வீதி, வெல்லாவெளி - பாலையடிவட்டை வீதி, காக்காச்சுவட்டை - சின்னவத்த வீதிகளை ஊடறுத்து வெள்ளநீர் பாய்வதனால் இவ்வீதிகளுடனான போக்குவரத்துக்களும் தடைப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .