2026 மே 04, திங்கட்கிழமை

சுனாமியால் சேதமான விவேகானந்தா பொதுநூலகம் மக்களின் பாவனைக்கு

Suganthini Ratnam   / 2013 பெப்ரவரி 19 , மு.ப. 05:56 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ரி.லோஹித்


மட்டக்களப்பு, களுவாஞ்சிக்குடி பிரதேசத்தில் மிகவும் பழமையான நூலகங்களில் ஒன்றாகக் கருதப்படுகின்ற பெரியகல்லாறு ஸ்ரீமுருகன் சனசமூக நிலையத்தின் விவேகானந்தா பொதுநூலகம் பொதுமக்களின் பாவனைக்காக நேற்று திங்கட்கிழமையிலிருந்து விடப்பட்டுள்ளது.

கடந்த சுனாமி அனர்த்தத்தின்போது சேதமடைந்த இந்த நூலகம் இதுவரை காலமும் பயன்படுத்தப்படாத நிலையில் காணப்பட்டது.

இந்த நிலையில், பெரியகல்லாறு விஸ்வப்பிரம்மகுல வாலிப சங்க இளைஞர்கள் மேற்கொண்ட அயராத முயற்சியின் காரணமாகவே இந்த நூலகம் மக்களின் பாவனைக்காக விடப்பட்டுள்ளது.

இதன்போது விவேகானந்தா பொதுநூலகத்தின் வளர்ச்சிக்கு பெரும்பங்காற்றிய சபாரத்தினம் ஆசிரியரின் உருவச்சிலை புனரமைக்கப்பட்டு திரைநீக்கம் செய்யப்பட்டது.

இந்தப் பிரதேசத்தில் 1972ஆம் ஆண்டு விவேகானந்தா பொதுநூலகம் முதன்;முறையாக உருவாக்கப்பட்டது.

விஸ்வப்பிரம்மகுல வாலிப சங்கத் தலைவர் பா.புஸ்பராஜா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பெரியகல்லாறு ஸ்ரீசிவசுப்ரமணியர் ஆலய தலைவர் சி.செல்வராசா, பெரியகல்லாறு ஸ்ரீசர்வார்த்த சித்திவிநாயகர் ஆலய தலைவர் கே.பேரின்பராசா, கிராம சேவகர் ஞானசிறி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .